பெரிய அளவில் தீர்க்க முடியாத பிரச்னையை கூட சரி செய்யும் சிறு எளிய பரிகாரம்
கொத்துக்கொத்தாய் இருக்கும் பிரச்சனை அதாவது பெரிய அளவில் சில குடும்பத்தில் பஞ்சாயத்து இருக்கும். அங்காளிகள் பங்காளிகள் அண்ணன் தம்பிகள் என்று கூடி பிரச்சனை செய்வதற்காகவே பஞ்சாயத்தை கூட்டுவார்கள்.
சிலருக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். சில பேருக்கு மதிப்பு மரியாதையில் குறைவு என்ற பிரச்சனை இருக்கும்.
பஞ்சாயத்து
திடீரென்று பார்த்தால் திருமணத்தில் கூட கைகலப்பு வந்து பஞ்சாயத்து என்று வந்து நிற்பார்கள்.
பெரிய அளவில் தலைக்கட்டு உள்ள குடும்பத்தில் பத்து பதினைந்து பேர் இருப்பார்கள். ஒருவர் சொல்லுவதை இன்னொருவர் கேட்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட குடும்பத்தில் பெரிய பிரச்சனை என்றாலும் அதை தீர்த்து வைக்க இந்த பரிகாரம் கை கொடுக்கும்.
கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்
நீண்ட நாட்களாக நீதி மன்றம் சென்றும் முடிவுக்கு வராத வழக்குக்கு செல்வதற்கு முன்பு நான்கு கொத்தவரங்காய்களை கையில் எடுத்துக் கொண்டு உங்கள் தடையை மூன்று முறை சுற்றி கொத்தவரங்காயை இரண்டாக முறித்து அப்படியே தூர தூக்கிப்போட்டு விட்டு செல்லுங்கள். (இந்த கொத்தவரங்காய் முறிந்து போவது போல, உங்களுடைய பெரிய பிரச்சனையும் முடிந்து போகும்.)
சில பேர் சில கிராமங்களில் பஞ்சாயத்து வைத்து பிரச்சனைகளை தீர்ப்பதற்காக போவார்கள். அப்படி பஞ்சாயத்தில் வைத்து ஒரு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தாலும் நீங்கள் அந்த பஞ்சாயத்திற்கு செல்வதற்கு முன்பு கொத்தவரங்காயை உங்கள் தலையை சுற்றி முறித்து போட்டு விட்டு சென்றால் அந்தப் பிரச்சினை காண முடிவு உடனடியாக கிடைத்துவிடும்.
பிரச்சனைக்கும் தீர்வு
இப்படி காலம் காலமாக தீர்க்க முடியாத குடும்ப பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சனை, பைசல் பிரச்சனை, என்று பெரிய அளவில் இருக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு.
உங்களுக்கு எந்த பிரச்சனைகள் எல்லாம் தலைவலியை கொடுக்கிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட இந்த பரிகாரத்தை செய்யலாம்.
எளிமையான முறையில் இப்படி அன்றாடம் நாம் பயன்படுத்தும் காய்கறி பழவகைகளை வைத்து அந்த காலத்தில் சித்தர்கள் நமக்கான சின்ன சின்ன பரிகாரங்களை வகுத்து வைத்துள்ளார்கள்.
காலப்போக்கில் அது மறந்து விட்டது மறைக்கப்பட்டது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.