கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு
முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் முடி முற்றிலும் சேதமடையக்கூடும். அத்தோடு முடி கொட்டும் பிரச்சனையும் தொடங்குகிறது.
மறுபுறம் சிலர் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு சில தவறுகளை செய்கிறார்கள் அது முடியை சேதப்படுத்தும்.
ஈரமான கூந்தலில் செய்யக் கூடாதவை
முடியை சீவுவது
பலர் தலைமுடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது முடி அதிகமாக சேதமடையும். எனவே முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் முடி உதிர்வதை தடுக்க வேண்டுமென நினைத்தால் முடி முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
இறுக்கமாக கட்டுவது
தலைக்கு குளித்த பின் பெரும்பாலானோர் தலைமுடியை இறுக்கமாக கட்டுவார்கள்.ஈரமான முடியை கட்டும் போது தலைமுடி அதிகம் சேதமடையும்.எனவே கொத்து கொத்தாக முடி கொட்டும்.
ஹேர் ஸ்ப்ரே
பலர் ஈரமான கூந்தலில் ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது தலைமுடியை சேதப்படுத்தும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும். எனவே முடி காய்ந்த பின்னரே ஹேர் ஸ்ப்ரேயைப் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடியை தேய்ப்பது
தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு பெரும்பாலும் துண்டை பயன்படுத்துகிறோம். ஆனால் அவ்வாறு முடியை உலர்த்த கூடாது. ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கலுமாகும்.