உங்க பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா அப்போ இந்த 3 பொருட்களை கையேடு எடுத்து செல்லுங்கள்
நாளுக்கு நாள் அனைவருடைய வாழ்க்கையிலும் குழப்பங்களும் பிரச்சனைகளும் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றது.
பிரச்சனைகளை சரி செய்ய எவ்வளவு போராட்டங்கள் எவ்வளவு முயற்சிகள். ஆனால், கடைசியில் மிஞ்சுவது தோல்வியம் குழப்பமும் தான்.
பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. மன குழப்பத்தில் இருந்து வெளிப்பட என்ன செய்வது.
ஆன்மீகத்தில் இதோ ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
குழப்பமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண செல்லும்போது இந்த பொருட்களை உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
நீண்ட நாள் தேங்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு கூட ஒரு திருப்புமுனை பிறக்கும்.
குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பரிகாரம்
முதலில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் ஆகும் போது சூரியனை தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் ஆசிர்வாதத்தை முதலில் பெற வேண்டும். பூஜை அறையில் வந்து குலதெய்வத்தையும் விநாயகரை மனதார நினைத்து குழப்பங்கள் தீர வேண்டும்.
தடைகள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பூஜை அறையில் வைக்க வேண்டிய மூன்று பொருட்கள்
பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் அருகம்புல், பச்சை கற்பூரம், வில்வ இலை இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய தாளில் இந்த மூன்று பொருட்களையும் எடுத்து வைத்து பொட்டலம் கட்டி வைத்துக்கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
நிச்சயமாக பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு உடனடியாக கிடைக்கும்.
மன குழப்பம் இருந்தாலும் அது நீங்கி தெளிவு பெறும்.
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த முடிவை எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பம் சில பேருக்கு இருக்கும்.
இந்த வேலையில் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமா அல்லது புதிய வேலை தேடலாமா என்ற குழப்பம் இருக்கும்.
இப்படி எந்த மன குழப்பம் இருந்தாலும் அதை தெளிவு செய்து கொள்ள கையோடு எப்போதும் இந்த 3 பொருளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய வாழ்க்கை தொடங்குபவர்கள்
புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக முயற்சி செய்பவர்கள், பெண் பாக்க செல்பவர்கள் அல்லது மணமகனை பார்க்கப் செல்பவர்கள் இந்த மூன்று பொருட்களை கையில் எடுத்துச் செல்லலாம்.
விநாயகரை மனதோடு நினைத்துக் கொண்டால் எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் தருணத்திலும் உங்கள் மனம் குழம்பாது.
தெளிவாக சில நல்ல முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கும். அந்த முடிவுகள் எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காத அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
தினமும் இந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
சிக்கலான சூழ்நிலையில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.
ஆனால் ஒரு வாரம் முழுவதும் பிரச்சனை தொடரும் என்றால் ஒரு வாரம் முழுவதும் தினமும் இந்த பரிகாரத்தை நீங்கள் பின்பற்றலாம். தவறு கிடையாது.
தினமும் பச்சை கற்பூரம், அருகம்புல், வில்வ இலை இந்த மூன்று பொருட்களையும் புதியதாக தான் சுவாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபாடு செய்து விட்டு கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.