யாழில் குவிக்கப்பட்ட படையினர்!(Photos)
இன்று யாழ்.மாநகரை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 75வது சுதந்திர தினத்தின் வடமாகாணத்திற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு போராட்டத்திற்கு பகிரங்கமான அழைப்பை நேற்று வித்திருந்தன.
இதனையடுத்து சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிராக யாழ்.மாநகருக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தடையுத்தரவை யாழ்ப்பாணம் பொலிஸார் பெற்றிருந்தனர்.
கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 7பேர் கைது
இதனையடுத்து யாழ்.மாநகருக்குள் நுழையும் பிரதான மார்க்கங்களை வழிமறித்து கலக தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், நீர்த்தாரை வாகனங்கள், மற்றும் கண்ணீர்புகை குண்டுகளுடன் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழில் இடம்பெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.