இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ள சூரிய கிரகணம்! எங்கு தோன்றும்?
சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகண நிகழ்வு இடம்பெறுகின்றது. சூரியனிடம் இருந்து வரக்கூடிய ஒளியை பூமிக்கு நேர்கோட்டில் சந்திரன் இடை மறிப்பதால் இந்த கிரகணம் தோன்றுகிறது.
மேலும், நிலவு (Moon) சூரியன் மற்றும் பூமிக்குமிடையே வரும்போது அதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் (2021) 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நாளை மறுதினம் டிசம்பர் 4ஆம் திகதி நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ திதியில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மணித்தியாலத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.
இதேவேளை, நவம்பர் 19 ஆம் திகதி சந்திர கிரகணம் ஏற்படுவதை தொடர்ந்து, சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து டிசம்பர் 4ஆம் திகதி சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. குறித்த சூரிய கிரகணமானது காலை 10.59 மணியளவில் தொடங்கி மாலை 3.07 மணியளவு வரை நீடிக்கும் எனவும், 4 மணித்தியாலம் 8 நிமிடங்கள் வரை நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நிகழ்வு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் எனவும் இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் காண முடியாது. இதனால் டிசம்பர் 4ஆம் திகதி கிரகணத்தை இணையம் வழியாக நேரடியாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியனுடன் ஒப்பிடுகையில் நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்.