சமூக ஊடகங்கள் முடக்கம்; காரணம் வெளியானது
நாட்டில் தற்போது யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது குறித்து சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையிலேயே பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்