எகிறியது வாகன உதிரிப்பாகங்களின் விலை ; திகைப்பில் பாவனையாளர்கள்!
வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள், வாகன பழுதுபார்ப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான கடனுதவியை வங்கி வழங்க முடியாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கொழும்பு பஞ்சிகாவத்த வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பான் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு
ஜப்பானில் தயாரிக்கப்படட பிரபல வாகனங்களின் உதிரிப்பாகங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள், குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில் ஆறு மாதங்களுக்கு முன் 12,000 முதல் 15,000 ரூபாய் வரை விலை போன இன்ஜின் மவுண்ட், தற்போது 45,000 முதல் 50,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், ஒரு வாகனத்தில் மூன்று அல்லது நான்கு இன்ஜின் மவுண்ட்கள் இருப்பதாகவும் உதிரிப்பாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இல்லையென்றாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் ஜப்பானிய புதிய மற்றும் பழைய வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதுடன், அதிக விலை உயர்வும் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.