ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெறலாம்.
அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்னெ்ன நன்மைகளை பெறலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
எடை குறைக்க உதவும்
காலையில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும் ஏனெனில் இதில் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
மலச்சிக்கலை தீர்க்கும்
மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்து உலர் திராட்சை. இதில் நிரம்பி உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி அஜீரண பிரச்சனைகளை நீக்குவதோடு, சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலுக்கு முடிவு கட்டுகிறது.
எலும்புகளை வலுவாக்கும்
உலர் திராட்சை எலும்புகளை வலுவாக்கும் ஆற்றல் கொண்டவை. அதோடு இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், செல்களுக்கு ஏற்படும் சேதத்தை போக்கி, உடல் வீக்கத்தை கட்டுப்படுத்தி, பலவகையான வலிகளுக்கு நிவாரணியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உலர் திராட்சை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பருவ கால நோய்களிலிருந்தும், தொற்று நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம். சிறுநீரகப் பாதையில் தொற்று இருப்பவர்கள் இதனை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் தொற்று நீங்கி, பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்
உலர் திராட்சை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.ஏனெனில் இதில் பொட்டாசியம் உள்ளது. இரும்புச்சத்து நிறைந்துள்ள உலர் திராட்சை, ரத்த சோகையை நீக்கும் அருமருந்து. இதனை தினமும் சாப்பிடுவதால், பலனை கண்கூடாக காணலாம்