கையிருப்பில் இவ்வளவுதான்; இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறிய தகவல்
நாட்டில் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.
அத்துடன் டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் மூன்று வாரங்களிற்கான எரிபொருள் கையிருப்பு இருப்பது வழமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த ஊகங்கள்காணப்பட்டன ஆனால் மத்திய வங்கி உட்பட ஏனைய வங்கிகளின் உதவியுடன் நாங்கள் இதுவரை வந்துள்ளோம் என தெரிவித்த அவர், ஆனால் தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளோம் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கேடி ஒல்கா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சாலைகள் மற்றும் போன்றவற்றிற்கான நாளாந்த தேவை 6000 மெட்ரிக் தொன் என சுட்டிக்காட்டிய அவர், தற்போது இது 9000 தொன்னாக அதிகரித்துள்ளதுடன், மின்சக்திதுறைக்கே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றதாகவும் கூறினார்.
எனினும் மேமாதம் வரையிலான வரட்சிக்காலங்களில் நீரை சேமிக்க முயல்கின்றோம்,
ஆறுமாதங்களிற்கு முன்னர் 15 முதல் 21 நாட்களிற்கு எரிபொருளை சேமிக்கும் நிலையிலிருந்தோம், நுரைச்சோலைமின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதும் எரிபொருளை சேமிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.