நாட்டில் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுகள்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.
பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 03 T -56 ரக துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 04 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.