ஒரு ஹக்கில் இத்தனை அர்த்தங்களா? கொண்டாடும் காதலர்கள்
உலக மக்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கும் மாதம் வந்து விட்டது.
பெப்ரவரி 14 காதலர் தினம்! ஆனால் அன்று மட்டும் இல்லாமல் பெப்ரவரி 7 ஆம் திகதி முதலே காதல் கொண்டாட்டத்திற்கான நாட்கள் தொடங்கிவிட்டது.
அந்த ஒவ்வொரு நாளுக்கும் தனி தனி சிறப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளது.
அதே போல பெப்ரவரி 12 ஆம் திகதி "Hug Day" கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் ஹக் டே கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஹக் பண்ணுவதற்கான அர்த்தங்கள்
உனது இதமான அணைப்பு இப்போதும் என்னுடன் இருக்கிறது. என்னை பிடித்துக்கொண்டு ஆதரவாக இருக்கிறது.
நான் எனது அன்பை உனக்கு அனுப்புகிறேன். உன்னை நான் எனது இறுக்கத்திலே வைத்திருக்க நினைக்கிறேன். உனது கவலைகளில் இருந்து உன்னைவிடுவித்து உனக்கு சௌகர்யமாக வைத்துக்கொள்ள என்னுகிறேன்.
ஒரு நீண்ட, இறுக்கமான மற்றும் இதமான அணைப்பு வாழ்வின் அணைத்து வலிகளுக்கும் சிறப்பான மருந்து. எனவேதான் நான், உன்னை இன்றும், என்றும் இறுக்கமாக அணைத்துக்கொள்கிறேன்.
ஒரு அணைப்பு உனது மனதை இதமாக்குகிறது. உன்னை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறது. நான் எப்போதும் உன்னை என் கரங்களுக்கு வைத்திருக்க ஆசைப்படுகிறேன்.
ஒரு அணைப்புக்கு அனைத்து சண்டைகளையும் முடிக்கும் சக்தி உள்ளது. உங்களின் கவலைகளை நீக்குகிறது. உங்களின் பதற்றத்தை குறைக்கிறது. அனைத்தையும் சரியாக்குகிறது.
எனக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு தோள் இருக்கிறது. ஒரு அணைப்பு எப்போதும் என்னை அன்பில் நிறைக்கிறது.
ஒரு தழுவல் என்னை தேற்றுகிறது. அது எனது காதல் போதை, அன்பே, நான் எப்போதும் உனது கரங்களில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
உனது கரங்களே எனது பாதுகாப்பான இடம். உனது புன்னகையே எனது சூரிய ஒளி, எனது வாழ்வில் நீ இருப்பது, எனக்கு மகிழ்ச்சி மருந்து.
ஒரு சிறப்பான நபரிடம் இருந்து கிடைக்கும் அன்பு எனக்கு அன்பானவர் என்னுடன் இருக்கிறார் என்று பொருள். அந்த சிறப்பான ஒருவர் நீ. நான் உனக்கு மகிழ்ச்சியான ஹக் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே இந்த ஹக் டே கொண்டாடப்படுகின்றது.
பெப்ரவரி 14 இல் ஹக் டே யின் பிரதிபலிப்பாகதான் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. அனைவருக்கும் இனிய ஹக் டே வாழ்த்துக்கள்.