பகைவர்கள் நெருங்காதிருக்க இந்த ஒரு பொருளை கூடவே வைத்திருங்கள்!
ஒரு சில பொருட்களுக்கு சில விசேஷமான தன்மை உண்டு. இதை தாந்ரீக முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஒரு பொருளை நம்முடன் வைத்துக் கொண்டால் நம்மை யாராலும் பகைத்துக் கொள்ள முடியாது என நம்பப்படுகிறது.
இதனால் துஷ்ட சக்திகளால் நம் குடும்பத்தையும், வேலை செய்யும் இடங்களிலும் சுற்றி உள்ள பகைவர்கள் எவராலும் நம்மை நெருங்க முடியாது.
மிளகு
நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தி விடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த பொருளாக இப்பொருள் கருதப்படுகிறது.
எந்த வகையான கொடிய விஷத்தை கூட முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு. இந்த மிளகு சமையலுக்கு மட்டும் அல்லாமல் ஆரோக்கிய நலனுக்காகவும், மூலிகை பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
விளக்கு ஏற்றுதல்
ஆன்மீகத்தில் கொடிய பகைவர்களை துவம்சம் செய்ய இந்த மிளகு போட்டு விளக்கு ஏற்றப்படுகிறது.
மிளகு சனி பகவான், கால பைரவர் போன்றவருக்கு உகந்த ஒரு பொருளாக இருக்கிறது.
இந்த ஒரு பொருளை நம்முடைய மணி பர்சில் நான்கைந்து எப்பொழுதும் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் நம்மை எதிர்க்க வரும் பகைவர்கள் எவரும் சூழ்ச்சி செய்து நம்மை எதிர்க்க முடியாது.
சூழ்ச்சியால் எதிர்கொள்பவர்கள்
கூடவே இருந்து கொண்டு துரோகம் செய்பவர்கள் இன்றைய காலகட்டங்களில் ஏராளமானோர் இருக்கின்றனர்.
மறைமுகமாக நம்மை சூழ்ச்சியால் எதிர்கொள்பவர்களை செயலிழக்க செய்யக்கூடிய ஆற்றல் மிளகிற்கு உண்டு.
எனவே எப்பொழுதும் மிளகை ஒரு கருப்பு துணியில் சிறு மூட்டையாக கட்டி உங்களுடைய மணி பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
பரிகாரம்
வீட்டில் பூஜையறையிலும் சிறு மூட்டையாக கட்டி மிளகை வைத்துக் கொள்ளலாம்.
சனிக்கிழமைகளில் காலபைரவர் கோவிலுக்கு சென்று 27 மிளகை கருப்பு துணியில் மூட்டையாக கட்டி தீபம் ஏற்றலாம்.
இதனால் பகைவர்கள் தொல்லை ஒழியும், கடன் பிரச்சினை நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு.