4 கிலோ மீற்றர் பயணித்து திருடனை பிடித்த மோப்ப நாய்
வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து பற்றரி திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பற்றரிகள் களவுபோயுள்ளது.
4 கிலோ மீற்றர் தூரத்தில் சந்தேகநபர் கைது
பற்றரிகள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர்.
மோப்ப நாய் ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக பற்றரியுடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார்.
மோப்ப நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து பற்றரிகளுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.