இலங்கையில் தாய்லாந்து நாட்டவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டவர் மற்றும் இலங்கையர் ஒருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர தலைமை நீதவான் உத்தரவிட்டார்.
கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரும், தாய்லாந்து நாட்டவர் ஒருவரும் இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் விற்பனை
படிலியத்துடுவ வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரி கடந்த 3 ஆம் திகதி மாலை களனி பிரிவு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
நீண்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், போதைப்பொருள் வழங்கிய தாய்லாந்து நாட்டவர் சீதுவை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், இரண்டு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டதுடன் மேலும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.