கேழ்வரகில் இத்தனை நன்மைகளா
தவறான உணவுப் பழக்கத்தாலும் இல்லாத வாழ்க்கை முறையாலும் நோய்கள் வந்தால் உணவாக கை கொடுப்பது சிறுதானியங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அதேபோன்று நோய்கள் நம் உடலை அண்டாமல் காப்பதும் சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் வறட்சியைத் தாண்டி வளரக்கூடிய பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நெல் போன்ற தானியங்களை விளைவிக்க முடியாத ஒரு சூழல் உருவாகும் போது நம்மை மீட்க போகிறவை சிறுதானியங்கள் என்று கூறப்படுகிறது.
சிறுதானியங்கள்
ராகி
சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேப்பை அல்லது கேழ்வரகு, தேவ உணவாக கருதப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிங் ஆப் மில்லட்ஸ் என்று கூறுவார்கள்.
கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. சைவ உணவில் அதிகப்படியான கால்சியம் இதில் தான் உள்ளது. பாலை விட மூன்று மடங்கு கால்சியம் கொண்டது.
நன்மைகள்
கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம் முதுமையை தடுக்கிறது. இது லெசித்தினுடன் இணைந்து அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.
அது மட்டும் இன்றி உடலை ரிலாக்ஸ் செய்து டென்ஷன் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றை சீர் செய்கிறது.
கேழ்வரகில் உள்ள நாசத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கின்றன.சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
நீரிழிவு நோய்
ராகி என்னும் கேழ்வரகு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இதில் பாலிஃபினோல்ஸ் (Polyphenols) மற்றும் ஃபைபர் (Fiber) அதிகம்.
நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
சத்துகள்
பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) போன்ற மினரல் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) சுரத்தல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ராகி எலும்புகளுக்கு உறுதி அளிக்கும். இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதி ஆக வைக்கும்.
உடல் எடை குறைப்பு
இதனால் மூட்டு வலி, முட்டி வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக கேழ்வரகை எடுத்துக் கொள்ளலாம்.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என் அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ளன.
குழந்தைகளுக்கு கேழ்வரகை போல் சத்தான சுவையான ஊட்டச்சத்து வேறு எதிலும் கிடைக்காது.
வளரும் குழந்தைகளைப் போலவே மாதவிடாய் கால மகள் இருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது.