பங்காளிக்கட்சிகளுக்கு கடும் தொனியில் பதிலடி கொடுத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி
திருமண பந்தத்தில் விருப்பம் இல்லையெனில் விவகாரத்து பெற்றுகொள்ள வேண்டும். அதேபோல தான் அரசில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் வெளியேறுவதே பொருத்தமாக இருக்குமென பங்காளிக்கட்சிகளுக்கு கடும் தொனியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச பங்காளிக்கட்சிகளால் நேற்று ‘மக்கள் பேரவை’க் கூட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது மொட்டு கட்சியின் செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்றைய கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
கூட்டணி அரசியலில் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். அரசாங்கத்திற்குள் ஒன்றையும், வெளியில் வேறொன்றையும் பேசக்கூடாது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் பிரதான கட்சி. நாய்தான் வாலை ஆட்ட வேண்டும். வாலால் நாயை ஆட்டுவிக்கமுடியாது. திருமணம் பிடிக்கவில்லையெனில் விவகாரத்து பெறவேண்டும் என்றார்.