கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்! வெளியான காரணம்
டி-20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் நோக்கில் இன்றைய தினம் (ஒக்டோபர் 18) முதல் போட்டியில் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி நமீபியா அணிக்கு எதிர் கொண்டு எளிதாக வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் நமீபியா அணியின் துவங்க வீரர்கள் ஸ்டீபன் பார்ட் 7 ஓட்டங்களுக்கும் ஜேன் கிரீன் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பின்னர் கிரெய்க் வில்லியம்ஸ் 36 பந்துகளில் 29 ஓட்டங்களும் மற்றும் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 19 பந்துகளில் 20 ஓட்டங்களும் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஒட்டங்களில் வேறியேற நமீபியா அணி 96 ஒட்டங்கள் எடுத்தது. நமீபியா அணியில் அதிகப்பட்டமாக கிரெய்க் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களும் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 20 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் தீஷனா 4 ஒவர்களை வீசி 25 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்களை விழ்த்தினார். வனிந்து ஹசரங்கா மற்றும் லகிரு குமார இருவர் தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவங்க ஆட்டக்காரர்கள் பத்தும் நிசங்க, குசால் பெரேரா, தினேஸ் சந்திமல் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேற இலங்கை 26 ஓட்டங்களுக்கு தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பானுகா ராஜபக்ஷ அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 13.3 ஓவரில் 100 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ 30 ஓட்டங்களும், பானுகா ராஜபக்ஷ 42 ஓட்டங்களை எடுத்தனர்.
மேலும் இந்த ஆட்டத்தின் போது இலங்கை அணியினர் அனைவரும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடியுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் போடி கேப்டன் பந்துல வர்ணபுரா (68) உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இலங்கை வீரர்கள் அனைவரும் இவ்வாறு விளையாடியுள்ளனர்.
இதேபோல 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடியுள்ளனர்.