இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!
இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக 7 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 6.832 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, பெப்ரவரி மாத இறுதியில் 7.284 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது ஒரு மாத காலப்பகுதிக்குள் 6.6 வீத வளர்ச்சியாகும். கடந்த 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மூலமான வருமானம் போன்ற காரணிகள் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அதிகரிப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.