கடந்த ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி 14.94 பில்லியன் டொலர்களாக பதிவு
கடந்த (2023) ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி , கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 947.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இது கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட வருவாயை விட 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 3,080.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இது 2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் 63.1சதவீதம் அதிகரித்துள்ளதுடன் , அதே வேளை ஜனவரி முதல் டிசம்பர் 2023 வரையிலான பொருட்களின் மொத்த ஏற்றுமதி 9.54 குறைந்துள்ளது.