பாடசாலை மாணவர்கள் அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
பசறையில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள் அறுவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை மீதம்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாடசாலை மதிய இடைவேளையின் போது இன்று புதன்கிழமை (16) மாணவர்களில் ஒரு மாணவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை ஆறு பேரும் பகிர்ந்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே அவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, வயிற்று வலியால் துடித்து வாந்தி எடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆறு மாணவர்களும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலை 2 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.