மீகொட சம்பவம்; பொலிசார் பகீர் தகவல்
கொழும்பு - மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது, காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.