சாணக்கியன் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த சிவநேசதுரை!
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பணம் பெற்றுக் கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புவதாக நாடாளுமன்றத்தில் எம்.பி சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், (Shankiyan Rasananickam) மூன்று கோடியினை பெற்றுக் கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.
எங்களுக்கு ஒழுக்கத்தினை கற்பிப்பதற்கு முன்னர், கூட்டமைப்பிலுள்ள சாணக்கியனுக்கு ஒழுக்கத்தினை கற்பிக்க வேண்டும் எனவும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எம்.ஏ.சுமந்திரனை (M.A Sumanthiran) நோக்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.