சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்
இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களும் கொண்டாடப்படும். சிவ பக்தர்கள் இந்த கொண்டாட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு பிடித்தமான அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு என்ன பயன் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மீது சிவ பெருமானின் ஆசிகள் எப்போதும் இருக்கும். சிவனின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களுக்கு வணிகத்திலும் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அலுவலக பணிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மீது சிவபெருமானின் ஆசிகள் எப்போதும் நிலைத்திருக்கும். சிவபெருமானின் ஆசிர்வாதத்தால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். மேலும், சிவ பக்தியால் மகிழும் ராசிக்காரர்கள் இவர்கள்.
மகரம்
மகர ராசியும் ஈசனுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். மேலும் சனி பகவான் சிவனை தனது தெய்வமாகக் கருதுகிறார். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். சிவன் அருள் அவர்களது பொருளாதார நிலையை வலுவாக வைக்கிறது. ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் மகர ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.
கும்பம்
சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. சிவனின் அருளும் ஆசியும் இந்த ராசிகள் மீது எப்போதும் நிலைத்திருக்கும். இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் சிவ பெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி காரணமாக அவர்கள் விரும்பிய பலன்களைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவன் அருளால் உடனடி தீர்வு கிடைக்கும்.