சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ; 600 ரூபாயை தொடும் விலைகள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளன.
சினோபெக் நிறுவனத்தின் புதிய விலை மாற்றங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை
ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை - 487 ரூபா என குறிப்பிடபட்டுள்ளது.
சுப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை - 572 ரூபா என குறிப்பிடபட்டுள்ளது.
ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை - 398 ரூபா குறிப்பிடபட்டுள்ளது.
ஒட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை - 382 ரூபா குறிப்பிடபட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது விலைகளை உயர்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் அதே விலையினைக் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது.