இராவணனின் மரபு வழித்தோன்றல்கள்தான் சிங்கள மொழியை உருவாக்கியவர்களா?
இராமயணத்தைத் தமிழில் வாசித்த முதல் கணப்பொழுதில் இருந்து என் மனதில் தோன்றிய கதைக்கான காட்சியமைப்பில் இராவணின் இராச்சியம் அமைந்த ஆளுமை மண்ணாக மத்திய இலங்கையே இருந்தது.
அந்த மன உணர்வு இன்றுவரைக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய சான்றாகச் சொல்லப்பட்டுவரும் மன்னாருக்கும் தனுஷ்கோடிக்குமான மணல் திட்டுகளின் வழிப்பாதையின் போக்காகும்.
மற்றும் அனுமாருடைய சீதைத்தேடிய பயணமும், இராவணன் புஸ்ப விமானத்தில் சீதையோடு பறந்துபோன பறப்புக்காட்சியும் தெற்குப்போனதாக என் மனப்பதிவாக இருப்பதும் என் நிறுவலுக்கு தரவாகும்.
மேலும், இராவணன் பேசிய மொழி பற்றி இராமயணக்கதையில் எந்தவிதக் குறிப்பும் கிடையாது. ஆனால், இராவணன் சிவ பக்தன் என்பது தெளிவாகக் கூறப்படுகிறது.
விஜயனுக்கு முன்னாடி புத்தர் இலங்கைக்கு வந்து போனததாகச் சொல்லப்படுகிறது. பின்னாடி வந்த இராவணனின் மரபு வழித்தோன்றல்கள் புத்த மதத்துக்கு மாறியிருக்கலாம்.
இங்கு முக்கியமானது சிங்கள மொழித் தோன்றம் பெற்ற காலமாகும். இராவணனின் ஆட்சிக்காலத்தில் சிங்கள மொழி இருந்ததில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், பின்னாடிதான் சிங்கள மொழி உருவாகியிருந்தாலும் இராவணனின் மரபு வழித்தோன்றல்கள்தான் சிங்கள மொழியை உருவாங்கியிருப்பார்கள் என்பதையும் மறுத்து நிற்க மாட்டார்கள்.
துட்டகைமுனு எல்லாளன் கதைக்குள் விஜயனின் வருகையில் சிங்களவர்களின் இருப்புக்கு அன்றைய கால அறிவு அரசியல் சூழலில் தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து வந்ததான கதை அரசியல் இருந்தது.
இலங்கை அரசியலுக்குள் மதமும் நுழைகிற பொழுது தமிழர்களின் தலைமைகள் கிருஸ்தவர்களாக இருந்து விடுவதில் சிவ பக்தனான இராவணனை தமிழ் சைவக்கடவுளாக புத்தருக்கெதிராக தமிழ்த்தேசிய அரசியலில் முன்னிருத்தத் தயாராக இருக்கவில்லை.
ஆங்கிலேய ஆட்சிக்காலம் முழுக்க தமிழ்த்தேசிய ஆங்கிலேயர்கள் கிருஸ்தவர்களாகவும் முழு இலங்கைக்கான ஆளுமை அதிகாரக்கனவில் இருந்ததில் சிங்களத்தரப்புக்கு எல்லாளனையும் புலிக்கொடியையும் வெல்வதானது மட்டுமே இருந்து வந்தது.
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் மேலெழும் இந்துத்துவ அரசியல் சூழலும் 2009 இற்குப் பின்னாடி சோழ வாரிசும் புலிக்கொடியை வெல்லும் சூழலும் ஏற்படுத்தும் எதிர்வினை அரசியல் ஈழத்தமிழர்களுக்கு இராவணன் தேவைப்படத் தொடங்குகிறான்.
இந்தியாவின் இந்துத்துவ சூழல் இலங்கையை ஆளுமைக்குட்படுத்தும் சூழலில் இராமனின் எதிராளி இராவணன் சிங்களத்தேசியத்துக்கும் தேவைபடத் தொடங்குகிறான்.
இச்சூழலில் இராவணனின் ஆளுமைப் பகுதி முழுக்கவும் சிங்கள தேசமாக இருப்பதால் இராவணனாக எல்லா இலங்கை ஜனாதிபதிகளும் இருந்து விடுகிறார்கள்.
எல்லாளன் போய் புலிக்கொடியும் முள்ளிவாய்க்காலோடு போய் இராமரோடு தாயகம் திரும்பாத அனுமார்களாக தமிழர்களின் இருப்பு ஆகிவிட்டது. இந்த மரபு சார்ந்த பழக்கமே அனுமாரை தெய்வமாக வழிபடும் சூழல் வடக்கு கிழக்கில் ஆழமாக வேருன்றிப்போய் விடுகிறது.
இந்த மரபுசார் பொக்கூள் கொடி உறவென இராமர் நோக்கி இந்த அனுமார் கூட்டம் கூட்டமாக செல்கின்றன.
இராவணனின் வழித்தோன்றல்தான் சிங்களவர்கள் என்பது என் வாதமே! என குறித்த பதிவை கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் Nixson Baskaran Umapathysivam என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.