மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

Jaffna Mannar Sri Lankan Peoples Money
By Shankar Aug 28, 2023 12:24 AM GMT
Report

நாட்டில் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடாத்தி இன்று (27-08-2023) இறுதி போட்டி என்று அழைத்து பல லட்சம் ரூபா வசூல் செய்து போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளது.

மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் | Singing Competition In Mannar Financial Fraud

மன்னார் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக, வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கண்டி, நுவரேலியா, கொழும்பு, மாத்தளை என இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து குறித்த போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.   

மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் | Singing Competition In Mannar Financial Fraud

3 மாதங்களாக குறித்த போட்டியை பதிவு செய்யப்படாத வானொலி ஒன்றின் பெயரின் ஊடாக விளம்பரப்படுத்தி தென் இந்தியாவிலிருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்வதாக தெரிவித்தும் பல லட்சம் பெறுமதியான பரிசில்கள் இருப்பதாக தெரிவித்தும் கலந்து கொள்பவர்களிடம் 1750 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்டு ஆரம்ப கட்ட பண வசூல் இடம்பெற்றுள்ளது.  

மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் | Singing Competition In Mannar Financial Fraud

இதன்படி, இன்று இறுதி போட்டியில் கலந்து கொண்டவர்களிடம் 1750 ரூபாயும் மற்றும் பார்வையாளர்களிடம் 400 ரூபாயும் வசூல் செய்து மண்டபத்திற்குள் அனுமதி வழங்கியிருந்தனர்.

சுமார் 1000 மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி குறித்த நிகழ்சியை பார்வையிடுவதற்காக காத்திருந்தனர்.

மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் | Singing Competition In Mannar Financial Fraud

8 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவித்த போட்டிகள் 11 மணியளவிலே ஆரம்பித்தாகவும் இசைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் குறிப்பாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடனத்துடன் சம்மந்தப்பட்ட கலாச்சர உத்தியோகஸ்தர் ஒருவரும் யார் என்றே தெரியாத மூவரும் நடுவர்களாக கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பல முறை நிகழ்சியின் இடை நடுவே முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் குண்டர்கள் சிலர் போட்டியாளர்களை மிரட்டி அமர வைத்துள்ளனர்.

மன்னாரில் பாடல் போட்டி: பாரிய பண மோசடி! ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் | Singing Competition In Mannar Financial Fraud

இவ்வாறான நிலையில் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த போட்டியாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எனினும், இன்றைய தினம் போட்டி ஒழுங்கான முறையில் இடம் பெறவில்லை என்பதுடன் வெற்றியாளர்களும் தெரிவு செய்யப்படவில்லை.

குறித்த போட்டியின் உண்மை தன்மை அறியாது இலங்கையின் பல பாகங்களில் இருந்து பல நூறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பணத்தினை இழந்துள்ளனர்.

மேலும், திருகோணமலையை சேர்ந்த ஒரு மாணவியை இவ் போட்டியில் பாட வைப்பதற்காக ஒரு கிராமமே பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி 1 லட்சத்துக்கு மேல் செலவு செய்து இந்த நிகழ்சிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US