கோட்டாவிற்கு எதிர்ப்பை தெரிவித்த சிங்கப்பூர் மக்கள்
அனுமதி இன்றி எவரேனும் பேசுவதற்கும் எதிர்ப்பை தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரில் "ஸ்பிகேர்ஸ் கேர்ணர்" (Speakers Corner) என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கூடிய சிலர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு நாட்டுக்குள் தங்க இடமளித்திருப்பதற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய மாலைதீவு வழியாக சிங்கப்பூரில் சென்று இறங்கியது முதல் அங்கு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ ஒன்றுகூடல்களையோ நடத்துவதற்கு அந் நாட்டுப் பொலிஸார் அங்குள்ள சட்டத்தின் கீழ் தடைவிதித்திருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே "ஸ்பீக்கர்ஸ் கோர்னெர்" (Speakers Corner) என்ற இடத்தில ஓரிருவர் கூடி எதிர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர்.
2020 தேர்தலில் மக்கள் குரல் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக நின்ற பிரபு ராமச்சந்திரன் (34) என்பவர் அந்த எதிர்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என சிங்கப்பூரின் ஆங்கில செய்தி பத்திரிகையான த ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. .