பிரதமர் மோடியுடன் ஐஸ்கிறீம் அருந்த காத்திருக்கும் சிந்து!
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கத்தை வென்ற இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள பிவிசிந்து இந்திய பிரதமருடனான சந்திப்பிற்காக காத்திருக்கின்றார்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின்னர் பிவி சிந்து இந்திய பிரதமர் வழங்கவுள்ள ஜஸ்கிரீமிற்காக காத்திருக்கின்றார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
டோக்கியோவிலிருந்து திரும்பியதும் செவ்வாய்கிழமை சிந்து பிரதமர் மோடியை சந்திப்பார் என அவரின் தந்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார். நீ டோக்கியோவிற்கு செல் திரும்பிவந்ததும் நாங்கள் ஐஸ்கிறீம் சாப்பிடுவோம் என மோடி தெரிவித்திருந்தார்.
ஒலிம்பிக்போட்டிகளிற்கு முன்னர் சிந்துவுடன் இந்திய பிரதமர் இணையவழிஉரையாடலை மேற்கொண்டவேளை எனக்கு ஐஸ்கிறீம் பிடிக்கும் ஆனால் உடல்தகுதியை பேணுவதற்காக அதனை தவிர்க்கின்றேன் என சிந்துதெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பின்னர் தான் அவரை ஐஸ்கிறீம் சாப்பிட அழைப்பதாக தெரிவித்திருந்தார்.