வெள்ளி முலாம் பூசி நான்கு கிலோ தங்கம் கடத்தல்!
வெள்ளி முலாம் பூசி கொண்டு செல்லப்பட்ட நான்கு கிலோ தங்கத்தை டில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவின் புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து சென்ற மூன்று பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
இந்திய ரூபாவில்.2.06 கோடி மதிப்பு
அப்போது, அவர்களிடம் வெள்ளி முலாம் பூசப்பட்ட 4001 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாவில்.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குவைத் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேவேளை உலகளவில் தங்கம் விலை பெரும் ஏற்றம் கண்டுள்ள நிலையில் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க இந்திய சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், விதவிதமாக தங்கக் கடத்தல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.