அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் வெளியே விமர்சிக்கின்றனர்
அமைச்சரவையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்காமல் வெளியே அது குறித்து கலந்துரையாடுவது தவறான விடயம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருவது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கருத்துதெரிவித்துள்ளார் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச் சரவை பத்திரமொன்று சமர்ப்பித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார் .
குறித்த பத்திரத்தினை சமர்ப்பிக்கும் போதே தமது கருத்துக் களை அமைச்சர்கள் தெரிவித்திருக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது என்றும் குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இது குறித்துக் கலந்துரையாடுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்தல் உட்பட LNG வழங்குவதற்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் பங்கு பற்றுதலுடன் கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் சில அமைச்சர்கள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.