முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதி செயலகம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் காலி முகத்திடல் வளாகத்தில் தன்னெழுச்சி போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
போர்ராட்டத்தில் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையிலேயே காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
காலி முகத்திடலில் இடம்பற்று வரும் போராட்டம் காரணமாக கோட்டை வரை கடும் வாகனநெரிசல் நிலவுகிறது. அதேவேளை போராட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
மக்கள் கூட்டத்தால் நிரம்பிய காலி முகத்திடல்; அடிபணிவாரா கோட்டாபய?


