நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதா
பொதுவாக வாழைப்பழம் மிகவும் சுவையான, சத்தான மற்றும் விலை மலிவாக கிடைக்கும் ஒரு அற்புதமான உணவாகும்.
இதில் அதிகளவு நார்சத்து நிறைந்துள்ளது மற்றும் இதனை சாப்பிடுவதால் ஜீரண சக்தி சிறப்பாக இயங்குகிறது.
வாழைப்பழங்கள் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.
பாதிப்புகள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் அவை மற்ற உணவுகளை விட இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும்.
ஒரு வாழைப்பழத்தில் கிட்டத்தட்ட 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது அதேசமயம் இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
சர்க்கரை அளவு
பொதுவாக நார்ச்சத்துக்கள் சர்க்கரையை மழுங்கடிக்கிறது. அதனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழைப்பழத்தை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வாழைப்பழம் பழுத்த நிலை ஆகியவற்றை பொறுத்து இதன் பாதிப்பு உள்ளது. நன்கு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை இருக்கும், அதேசமயம் பச்சை நிறத்தில் உள்ள வாழைப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கும் எனவே இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது.
வாழைப்பழங்களில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பச்சை வாழைப்பழத்தில் காணப்படும் ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
மேலும் இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் அபாயம் குறைகிறது என்பது தெரியவந்துள்ளது.