செவ்வாய் கிழமையில் சுபகாரியங்கள் செய்ய கூடாதா?
பொதுவாக இந்துக்கள் , திருமணங்கள், புதிய தொழில் தொடங்குதல், இப்படி பல்வேரூ சுப காரியங்களை செய்வதற்கு நாள் நேரம் எல்லாம் பார்த்து தான் தொடங்குவார்கள்.
ஏனெனில் நாம் செய்யும் காரியங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படக்கூடாது என கடவுளை பிராத்தித்தான் எந்தவொரு சுப காரியங்களை செய்யும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற்து.
அதேசமயம் பிற நாட்டகளிலும் பார்க்க செவ்வாய் கிழமை அன்று நல்ல காரியங்களை செய்யாமல் தவிர்த்துவிடுவதை நாம் காண்கின்றோம்.
வாரத்தில் 7 நாட்களில் மங்களகரமான நாள், இறை வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அதற்கு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளை தான் பரிந்துரைப்பார்கள்.
அதுவே நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாட்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்.
செவ்வாய் அன்று நல்ல காரியங்களை தொடங்கினால் அது நன்றாக இருக்காது என்ற கருத்து பரவலாக நம்பப்பட்டு வருகிறமை தான் அதற்கு காரணம்.
ஏன் நல்ல காரியங்களை செய்யக்கூடாது?
வாரத்தில் 7 நாட்கள் உண்டென்றாலும் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவற்றில் புதிய உடை, நகை ஆகியவற்றை வாங்கி சேர்த்தால் அவை பல மடங்கும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆனால் செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. செவ்வாய் பகவான் தான் போரின் கடவுள். பூமா தேவியுடைய புத்திரன். இவருக்கு கருணையும், ஆளுமையும் உண்டு. அதேசமயம் முருகப் பெருமானுக்கு ஏற்ற நாளும் செவ்வாய்கிழமை என்பார்கள்
. செவ்வாய் பகவான், முருகன், பூமாதேவி ஆகியோரை வணங்கி செவ்வாய் அன்று மங்கலப் பொருட்கள் வாங்குவோருக்கு செல்வம் பல மடங்கு பெருகிவரும் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்லாது செவ்வாய் தோஷ பரிகாரம், துர்கா ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பூமி பூஜை போன்ற பூஜை வழிபாடுகளை செவ்வாய் கிழமை அன்று செய்யலாம்.
எந்த தோஷ பரிகார பூஜையானாலும் செய்ய செவ்வாய் கிழமை சரியான நாளாகும்.
செவ்வாய்கிழமை தவிர்க்க என்ன காரணம்?
செவ்வாய் கிரகத்தின் அம்சங்களாக கூறப்பட்டுள்ள விஷயங்களை பார்த்தால், செவ்வாய் பகவான் விசுவாசம் கொண்ட பணியாளராக இருக்கிறார். அவரிடம் விசுவாசம் இருந்தாலும் மூர்க்க குணமும் சேர்ந்து இருக்கிறது.
செவ்வாய் பகவான் மூர்க்க குணம் கொண்டிருப்பதால் பின் விளைவுகளை குறித்து சிந்திக்காமல் செயல்படுவார். ஆகவே செவ்வாய்க்கிழமை அன்று செய்யப்படும் காரியங்களுக்கு வேகம் ரொம்ப இருக்கும்.
அந்த வேகத்தில் பின் விளைவுகளும் ஏதேனும் ஏற்பட்டு பாதிப்பு வரக்கூடாது என்ற எச்சரிக்கையால் தான் அன்றைய தினத்தில் நல்ல காரியங்களை தவிர்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
செவ்வாய் கிழமையில் இவற்றை செய்தால் சிறப்பு
செவ்வாய் கிழமை அன்று நாம் வாங்கிய கடனை திரும்ப கொடுத்தால், மொத்த கடனும் விரைவில் அடைபடும். செவ்வாய்க்கிழமை மௌன விரதம் இருப்பவர்களுக்கு யாகம் செய்வதற்கு சமமான பலன்கள் கிடைக்குமாம்.
செவ்வாய்க்கிழமையில் எவரேனும் விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அது தீமையில் கொண்டு விடும். கிழக்கு திசை பயணங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றது. அந்த காரியங்கள் நிச்சயம் வெற்றிதான்.