வைத்தியசாலைகளில் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு
மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.