பொறுப்பதிகாரியுடன் சண்டையிட்டு தப்பி ஓடிய கடை உரிமையாளர் சிக்கினர்!
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பதுளை மாவட்ட நிலைய பொறுப்பதிகாரியுடன் சண்டையிட்டு தப்பி ஓடிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை எரிவாயு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த கடையில் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இடம்பெற்றுள்ளது.
சண்டையின் காரணமாக காயமடைந்த கடையின் உரிமையாளரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பதுளை மாவட்ட நிலைய பொறுப்பதிகாரியும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.