துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால், லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கொலை முயற்சி
சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச்சம்பவத்தில், இந்த சந்தேக நபர் துப்பாக்கிதாரியாக செயல்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.