சொந்த வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு; நாடகமாடியவருக்கு விளக்கமறியல்
தனது சொந்த வாகனத்தை குறிவைத்து தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, வியாழக்கிழமை (04) உத்தரவிட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் இணைந்து ஹல்லோலுவ இந்த நாடகத்தை திட்டமிட்டுள்ளார் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சந்தேக நபர் விசாரணையைத் தடுக்கலாம் மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை காரணம் காட்டி, அவரது ஜாமீன் மனுவை நீதவான் நிராகரித்து, அவரை காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.