ரணில் சொத்துக்கள் தொடர்பில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அதிர்ச்சி அறிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் (Steve Hanke) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1977ஆம் ஆண்டு முதல் விக்கிரமசிங்க ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்து “ஊழல் ராஜபக்சக்களை” பாதுகாத்ததாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரமாதித்தன் ராஜபக்ஷவின் குளோன் அல்ல என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது என பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
New Pres. Wickremesinghe should be on the hot-seat for corruption allegations. Since 1977, Wickremesinghe has been Sri Lanka's PM SIX times & protected the corrupt Rajapaksas. Wickremesinghe is nothing but a Rajapaksa clone. Time to audit his assets. https://t.co/ZaZ3brZobn
— Steve Hanke (@steve_hanke) July 21, 2022