இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல் ; அரிசி விலை மீண்டும் உயர்வு
நாட்டில் அண்மைகாலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் அரிசி வகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், சம்பா மற்றும் நாட்டரிசி விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முதித்த பெரேரா வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கை சந்தையில் கீரி சம்பாவின் தற்போதைய விலை 210 ரூபாவாகவும், சம்பா அரிசி விலை 155 ரூபாவாகவும், நாட்டரிசி 130 ரூபாவாகவும் காணப்படுகின்றன.
இதேவேளை அரிசி வகைகளுக்கு அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலை கடந்த மாதம் இரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து அரிசியாலை உரிமையாளர்கள் அரிசி வகைகளின் விலைகளை பகிரங்கமாக அறிவித்து ஒருமாதத்திற்குள் மீண்டும் அரிசி விலை அதிகரித்துள்ளமை மக்களை நெஉக்கடியில் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.