அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 21 சதவீதமானோர் இவ்வாறு துஷ்பிரரோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் ஒரு மணிநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரித்தால், 38% வீதமானோர் 11 வயது முதல் 15 வயதுக்கும், 75 % 15 வயதிற்குப்பட்டவர்களாகவும், 21 % 5 வயதிற்குப்பட்டவர்களாகவும், 17% 5 வயது முதல் 10 வயதிற்குப்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 13 சதவீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.