தமிழர் பகுதியொன்றில் மகளின் வீட்டிலிருந்து திரும்பிய குடும்பத்தினருக்கு ஷாக் கொடுத்த மர்ம நபர்கள்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதீனா பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் திருடர்கள் கைவரிசையினை காட்டியுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் ஓட்டமாவடி பகுதியிலுள்ள அவர்களின் மகளின் வீட்டில் தங்கியிருந்து மீண்டும் தங்களது வீட்டிற்கு சென்ற போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத விடயத்தை அறிந்து கொண்ட திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து மின் இணைப்பு வேலைக்காக இருந்த வயர் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அல்லது நேற்று முன்தினம் சனிக்கிழமை (02) ஆகிய தினங்களில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.