கைவிடப்பட்ட ஹோட்டல் தண்ணீர் தொட்டியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தண்ணீர் தொட்டியிலிருந்து ஒரு கிலோ 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றில் இருந்தே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சந்தேகம்
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 22 இலட்சம் ரூபாவாகும்.
இந்த போதைப்பொருள் துபாயில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுமான கோரலகமகே மந்தினு பத்மசிறி பெரேரா என்பவருக்கு அல்லது கெஹெல்பத்தர பத்மே என்பவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.