செங்கடலில் பாதுகாப்பற்ற சூழ்நிலை; இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்
அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் (2024) ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
செங்கடலில் நிலவும் மோதல்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
செங்கடலைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக, கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பல் சேவைகளை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக நகர்த்தியுள்ளனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் 24 கப்பல்கள் நங்கூரமிட்டிருந்த நிலையில், துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடுவதற்காக காத்திருந்த கப்பல்களின் எண்ணிக்கை 06ஆக காணப்பட்டுள்ளன.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே வலுக்கும் போரின் காரணமாக, ஹமாஸிற்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை ஈரானிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள் அதன்பொருட்டு, செங்கடல், அரபிக்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியினூடாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருவதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.