பிக்பாஸ் பிரபல நடிகை சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா... கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
பிக்பாஸ் பிரபலம் நடிகை Shefali Jariwala சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி ஜரிவாலா, இவர் ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திடீரென குறைந்த ரத்த அழுத்தம்
தொடர்ந்து Shefali Jariwala , Bigg Boss 13-ல் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் ஹர்மீத் சிங்கை திருமணம் செய்த ஷெபாலி, குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2008 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர், நடிகர் Parag Tyagi உடன் நான்கு ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர், 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி, Mumbai யில் உள்ள தனது இல்லத்தில் ஷெபாலிக்கு திடீரென ரத்த அழுத்தம் மிகவும் குறைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேவேளை ஷெபாலி முதுமையைத் தடுப்பதற்கான ஊசிகளை பயன்படுத்தி வந்ததாகவும், சம்பவ நாளில் பூஜைக்காக உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
முதுமையைத் தடுப்பதற்கான ஊசி
அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், தற்போது கணவர் பராக் டயாகி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை சிலர் சூனியம் வைத்து கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கடவுள் உள்ள உலகில் பிசாசும் உள்ளது. சிலர் தங்களின் துன்பங்களை விட, பிறரின் மகிழ்ச்சியைப் பார்த்து அதிக வேதனைப்படுவார்கள்.

என் மனைவி ஷெபாலிக்கு யார் சூனியம் வைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை இப்போது வெளியே சொல்ல முடியாது,” என கூறியுள்ளார். எங்களுக்கு இரண்டு முறை சூனியம் வைத்தார்கள்.
முதல்முறையை எங்களால் சமாளித்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இரண்டாவது முறை மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.