நெடுந்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி
யாழ்ப்பாணம் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவியான விஜயகுமார் டர்ஜினி உயர்தர பரீட்சையில் 3ஏ சித்திகளைப் பெற்றதுடன் , மாகாண மட்டத்தில் 32 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அண்மையில் வெளியாகிய 2022 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் 3ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் விஜயகுமார் டர்ஜினி .
எதுவிதமான வளங்களுமின்றிய பாடசாலை
அதேசமயம் நெடுந்தீவு சைவப்பிரகார வித்தியாலயத்தில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் 3 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் மூவரும் சித்தியடைந்துள்ளனர்.
அதில் விஜயகுமார் டர்ஜினி 3ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் மிகவும் பின்தங்கிய பாடசாலை என்ற வகையில் மாணவர்கள் கலைப்பிரிவையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் அங்கு உள்ளது.
மேலும் எதுவிதமான வளங்களுமின்றி பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் மாணவி விஜயகுமார் டர்ஜினி உயர்தரத்தில் 3ஏ பெற்றுள்ளமை பெருமை கொள்ளவேண்டிய விடயமாகும்.