காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை
கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞனின் காதலி உட்பட மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்குகளின் முடிவில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காதலனை கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.