வெற்றிடமான இரா. சம்பந்தர் இடத்திற்கு சண்முகம் குகதாசன்?
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தமிழ் அரசுக் கடசியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
இதையடுத்து, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது 16170 அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என அரசியல் கள நிலவரம் ஊடாக அறிய முடிகிறது.
அதேவேளை மறைந்த இரா. சம்மந்தனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து திருகோணமலையில் இன்று (01)மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன் அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.