லசித் மாலிங்கவின் உலக சாதனையை முறியடித்த ஷகிப் அல் - ஹசன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்கவின் (Lasith Malinga) உலக சாதனையை பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) முறியடித்துள்ளார்.
இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதன்போது ஷகிப் 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, இருபதுக்கு 20 போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்வடைந்துள்ளது.
இருபதுக்கு இருபது போட்டிகளில் லசித் மாலிங்க 84 போட்டிகளில் 107 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், 89 போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) அந்த சாதனையை தன்வசப்படுத்தினார்.
அதற்கமைய, நேற்றைய இருபதுக்கு 20 போட்டியுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஷகிப் (Shakib Al Hasan) இந்த சாதனையை முறியடித்துள்ளார். தற்போது, இருபதுக்கு 20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு பெறுதியை இந்தியாவின் தீபக் சஹர் தனதாக்கியுள்ளார்.
பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியொன்றில் 3.2 ஓவர்களை வீசி, 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை ஷகிப்பின் (Shakib Al Hasan) சிறந்த பந்துவீச்சு பெறுதியாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் முதலாம் சுற்றுப் போட்டியில் பங்களாதேஸ் அணியை தோற்கடித்து 6 விக்கெட்டுகளால் ஸ்கொட்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.