கொரிய இளம் யுவதியிடம் சேஷ்டை ; இளைஞருக்கு நேர்ந்த கதி
இலங்கைக்குச் சுற்றுலா வந்த கொரிய இளம் யுவதியிடம் தகாத வகையில் சேஷ்டை செய்த இயந்திர படகு ஓட்டுநர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (01) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த யுவதி நுவரெலியா சென்ற நிலையில் கிறேகறி தெப்பக்குள பகுதிக்கு (30) மாலை அழகை ரசிக்க சென்று அங்குக் குளத்தில் இயந்திர படகில் சவாரி செய்ய முற்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இதன்போது குளத்தில் படகு சேவையில் ஈட்டுப்பட்டிருந்த இளைஞர் குறித்த யுவதியிடம் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, யுவதி நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனக்கு சம்பவம் தொடர்பில் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, சுற்றுலாத்துறை பொலிஸ் பிரிவினர் கிறேகறி குளத்திற்குச் சென்று சேட்டையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
கைதான இளைஞரை விசாரணைக்காக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, விசாரித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் திங்கட்கிழமை (15) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.