பெற்றோரே பிள்ளைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்! இப்படியான சம்பவங்களும் அரங்கேறுகின்றன
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய தமிழ் பாட ஆசிரியர் தான் கல்வி கற்பிக்கும் மாணவி ஒருவரிடம் தொலைபேசி ஊடாக பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் வவுனியா வலயக் கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை நாளைய சந்ததியை நல்வழிப்படுத்தவேண்டிய ஆசிரிய சமூகம் இவ்வாறான இழிசெயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயம் ஆகும்.
பாலியல் தொந்தரவு
இதுபோன்ற சம்பவங்கள் தமிழர் பிரதேசங்களில் அடிகடி நிகழ்ந்துகொண்டிருக்கின்றமை கவலைக்குரிய விடயம் ஆகும்.
அண்மையிலும் இதேபோன்றதொரு சம்பவம், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மகளீர் கல்லூரியிலும் இடம்பெற்றதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி வேறு பாடசாலைக்கு மாறியிருந்தார்.
இந்நிலையில் இவ்வாறானவர்களை பெரும் புனிதமான ஆசிரியப் பணியில் இருந்து நீக்கவேண்டும் என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.